இந்தியாவை உலுக்கிய பிரியங்காவின் மரணம்: கடைசி நேர சிசிடிவி காட்சி-குற்றவாளியின் புகைப்படம் வெளியானது

ஹைதராபாத்தின் Shadnagar பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி(மாதுரி). கால்நடை மருத்துவரான இவர் வியாழன் காலை கருகிய நிலையில் பாலத்தின் அடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையிலேயே பிரியங்கா Nawabpet- உள்ள கால்நடை மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. பிரியங்கா கடந்த புதன்கிழமை மாலை 8.22 மணிக்கு தனது சகோதரி பவ்யாவுக்கு போன் செய்து பேசியுள்ளார். அதில், தனது இருசக்கர வாகனம் பஞ்சராகிவிட்டதால், சாலையில் இருட்டில் தனியாக நிற்பதாகவும், இரண்டு பேர் உதவி செய்வதாக கூறி தனது வாகனத்தை வாங்கி சென்றதோடு இன்னும் திரும்பி வரவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

மேலும் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் தனக்கு பயமாக உள்ளது எனவும் கூறினார் அதற்கு பவ்யா, வண்டியை பற்றி யோசிக்காமல் அருகில் இருக்கும் டோல் கேட்டுக்கு சென்று நில் என கூறினார். ஆனால் அதை கேட்காத பிரியங்கா, டோல் கேட்டில் நின்றால் சரியாக இருக்காது, கொஞ்ச நேரம் பார்க்கிறேன், வண்டி சரிசெய்யப்படாவிட்டால் நான் கிளம்பி வீட்டுக்கு வருகிறேன் என கூறினார். இதன்பின்னர் மீண்டும் குடும்பத்தார் பிரியங்காவை போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

இதையடுத்து அவர்கள் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் அடுத்த நாள் பிரியங்கா கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் விசாரணையில் இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி மொகமத் பாஷா என்ற நபர்தான் என்று அங்கிருக்கும் உள்ளூர் உடகங்கள் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதோடு பிரியங்காவின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

#JusticeForPriyankaReddy என்ற இரண்டு ஹேஷ் டேக்குகளும் டிரண்டாகி, இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.