உத்தரபிரதேசத்தில் , 9 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த, 11 வயது மாணவனை, போலீசார் கைது செய்தனர்.காஜியாபாத் மாவட்டம், முராத் நகரில் உள்ள அரசு பள்ளியில், 15ல், சுதந்தர தின விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சி முடிந்து, பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில், அந்த பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவியை, அதே பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும், 11 வயது மாணவன் இடை மறித்து .மாணவியை கட்டாயப்படுத்தி, ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற அவன், அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
மேலும்,’இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது’ என மிரட்டி, வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.வீடு திரும்பிய மாணவிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது; இதையடுத்து, திடீரென மயங்கி விழுந்தாள்.இதனையடுத்து,சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், வலிக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது, தனக்கு நடந்த கொடுமை குறித்து, பெற்றோரிடம் விளக்கினாள்.
மருத்துவ பரிசோதனை செய்ததில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. அதனையடுத்து , அந்த மாணவனின் வீட்டிற்கு சென்ற மாணவியின் பெற்றோர், அவர்களின் மகன் செய்த தவறு குறித்து தெரிவித்தனர்.தங்கள் மகனின் தவறை ஒப்புக்கொண்ட அவனதுபெற்றோர், இது குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டாம் எனக் கூறினர்;
கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களையும் தங்களுக்கு ஆதரவாக பேச வைத்தனர்.எனினும், தங்கள் மகளுக்கு நடந்த கொடுமை குறித்து, மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவனை கைது செய்தனர்.தற்போது அவனை, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.