இறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சடலத்துடன் உறவு வைத்துக்கொண்ட இளைஞன்.

அமெரிக்காவில் இறந்து சில மணி நேரங்களே ஆன பெண்ணின் சடலத்துடன், மருத்துவமனை பாதுகாவலர் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் 37 வயதான Parham.


இவர் கடந்த புதன்கிழமையன்று மாரடைப்பால் புனித பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.


பின்னர் அவர் உடலுறுப்புகளை தானம் செய்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, உடலை எடுத்து வருவதற்காக அன்று மாலை, இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் பிணவறையை நோக்கி சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வரும் Cameron Wright (23)

என்ற இளைஞர் Parham சடலத்துடன் உறவு வைத்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் Parham, உறவினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளி தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.