கருணாநிதி உடல்நிலை குறித்த பேச்சே எதிரொலித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில்,இன்று மாலை சரியாக 6.10 மணியளவில் இயற்கை எய்தியுள்ளார். இந்நிலையில், அவர் வாழ்க்கை குறித்த ஒவ்வொரு விடயங்களும் மக்களின் மனதில் மறையா வடுவாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.தன் உடல்நிலை சரியில்லாத போதிலும், தமிழ் மொழிக்காக அவர் எழுதிய ஒவ்வொரு வசனங்களும், கதைகளும் தமிழ் மொழியை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.
அப்படி, அவர் தான் இயற்றிய நாளிலிருந்து மிகவும் ரசித்துக் கேட்ட பாடல் இது தானாம்.கருணாநிதியின் கைவண்ணத்தில் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்த செம்மொழியான தமிழ்மொழியாம் பாடல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 இன் அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடல். இந்தப் பாடல் கர்நாடக, கிராமிய, ஒலியியல், சூஃபி இசை, ராக் மற்றும் ராப் உள்ளிட்ட பல்வேறு இசை பாணிகளின் ஒரு கலந்திணைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 70 பாடகர்கள் ஒலியில் இந்த பாடல் வெளிவந்தது பலருக்கும் பிரமிப்பை தந்திருந்தது. கிட்டத்தட்ட மூன்று மாத கால உழைப்பில் வெளிவந்த இந்த பாடலின் இறுதி வடிவத்தை கேட்கும் போது கருணாநிதியே மெய் மறந்து ரசித்தாராம்.
இரவு, பகலாக பல கலைஞர்கள் உழைப்பில் வெளியான இந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் பார்த்து பார்த்து சேர்த்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. தமிழ் மொழி மீது அவர் வைத்திருந்த ஒட்டு மொத்த காதலின் மொத்த வடிவமாக இந்த செம்மொழி பாடல் வெளியானது.
இதில் சுவரசியமான மற்றொரு தகவல் என்னவென்றால் இந்த பாடல் இசையமைக்கப்படும் போது கலைஞர் நேரிலே சென்று ஸ்டோடியோவிலே இருந்து பல நாட்கள் பாடல் உருவாகுவதை கவனித்துள்ளார்.
அதே போல் இந்த பாடல் வெளியான பின்பு அதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் அழைத்து பாராட்டியும் உள்ளார். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு கருணாநிதி பங்குப்பெற்ற அனைத்து அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என அனைத்து இடத்திலும் கருணாநிதி வரும் போது முதலில் ஒலிக்கப்படும் பாடல் செம்மொழியான தமிழ்மொழியாம்.