ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகரா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

நகைச்சுவை நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்பத்திமூன்றாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய சிரிப்பின் மூலமாக நமது திரை உலக மக்களை எல்லாம் கட்டிப் போட்டவர்.

இந்த வெண்ணிற ஆடைமூர்த்தி 1936 ஆம் ஆண்டு பிறந்தார். டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1965ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பிஏபிஎல் பட்டதாரி. இவர் சினிமா உலகில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது இரண்டு வருடங்களாக

இவருடைய உடல் நிலை நடிப்பதற்கு ஒத்துப் போகாத காரணத்தினால் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவரின் நிலையை பார்த்த ரசிகர்கள் இது வெண்ணிறாடை மூர்த்தியா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். வயதாகிவிட்டதால் அவரின் நிலை மோசமாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.