ஒரே பெண்ணைக் காதலிப்பதில் போட்டி போட்ட கல்லூரி மாணவர்கள்.. கடைசியில் நடந்த விபரீதம்..!

கும்பகோணம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் போட்டியால் கொலை செய்துவிட்டு கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது.  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது, துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் முகமது மும்தாசர், மயிலாடுதுறையில் உள்ள ஏவிசி பொறியியல் கல்லூரியில் பி.இ.2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு அக்கா வீட்டிற்கு செல்வதாக சென்ற முகமது மும்தாசரை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

இதனையடுத்து மும்சாதர் செல்போனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்ம நபர் மும்சாதரை கடத்தி கோவைக்கு கொண்டு செல்வதாகவும், 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு மகனை மீட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதுகுறித்து உடனே அவரது தாயார் பொலிசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திருபுவனம் அருகே காவிரி ஆற்றங்கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் புதரில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றி பொலிசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கினர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, மும்தசரை கொலை செய்ததாக அவரது சக நண்பர்களான நியாஸ் அகமது, முகமது கலீல் மற்றும் சலீம் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருபுவனத்தில் கல்லூரி படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதேசமயம் இவரது நண்பர் நியாஸ் அகமது என்பவரும் அதே பெண்ணை காதலித்துள்ளார். அந்தப் பெண் முகமது மும்தசீருடன் பழகி வந்துள்ளார். அவர்களின் நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த நியாஸ் அவனை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது நண்பனின் பிறந்த நாளுக்கு செல்லலாம் என மும்தசீருவை திருவிடைமருதூர் அழைத்துச்சென்றுள்ளார் நியாஸ். அங்கு சென்றதும் அங்கிருந்த தனது நண்பர்கள் முகமது ஜலீல் மற்றும் சலீம் ஆகியோருடன் சேர்ந்து மும்தசீரை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை ஆற்றங்கரையோரம் வீசி சென்றதாக கூறியுள்ளனர்.