பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக வேறொரு நடிகர் நடித்து வந்தார். அந்த நடிகர் சீரியலை விட்டு விலகி விடவே அவருக்கு பதிலாக நடிகர் ஈஸ்வர் ஆள் மாற்றப்பட்டார். அந்நேரத்தில் அதே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை மகாலட்சுமிக்கு நடிக்கும் ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது. நடிகை மகாலட்சுமியும் அதே சீரியலில் வில்லனாக நடித்து வந்த வேறு ஒரு நடிகருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்கள் இருவரையும் லிவ்- ன் ரிலேஷன்ஷிப்பில் வாழ வைத்தது. ஒரு கட்டத்தில் அந்த வில்லன் நடிகருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையில் பிரச்சினைகள் உருவாகி உள்ளது.
ஆகையால் மகாலட்சுமி அவருடன் இருந்த பழக்கத்தை முறித்துக் கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வில்லன் நடிகர் தானும் மகாலட்சுமியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை மகாலட்சுமியின் கணவரிடம் காண்பிக்க சென்றிருக்கிறார் . இதனால் அச்சமடைந்த மகாலட்சுமி அந்த சீரியலின் ஹீரோவாக நடித்து வந்த ஈஸ்வரிடம் நடந்ததைக் கூறி உதவி கேட்டிருக்கிறார். உடனே ஈஸ்வரும் அந்த வில்லன் நடிகரை மிரட்டி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொண்டு வந்துள்ளார். இப்படியாகத்தான் நடிகை மகாலட்சுமிக்கும் ஈஸ்வருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நாளடைவில் இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதை அறிந்துகொண்ட ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ முதலில் அவரை கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வர் தனது மனைவியை போட்டு கண்டபடி அடித்திருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நடிகை ஜெயஸ்ரீ போலீசில் தன்னுடைய கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
தற்போது தேவதையை கண்டேன் சீரியல் ஹீரோ ஈஸ்வர் ஜெயிலில் இருக்கிறார். அதேசமயம் தனக்கு ஏதாவது பிரச்சினை வரப்போகிறது என்று கருதி நடிகை மகாலட்சுமி தலைமறைவாகிவிட்டார். ஒரே சீரியலை சேர்ந்த ஹீரோ மற்றும் வில்லி ஆகிய இருவரும் சீரியலில் நடிக்க வராதது குறித்து அந்த சீரியலை தயாரிக்கும் தயாரிப்பாளர் யோசனை மேற்கொண்டு வருவதாக கூறி வருகின்றனர்.