கருணாநிதியை பார்க்க வந்த தளபதி விஜய், குவிந்த கூட்டம்..! வைரலாகும் வீடியோ

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து வருகின்றனர்.தளபதி விஜய் எப்போதும் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இளம் நடிகர்களில் கருணாநிதி அவர்களுக்கும் விஜய்யை தான் மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல் நிலை முடியாமல் இருந்து வந்தார், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர, ரஜினி, சூர்யா, விவேக் என பல நடிகர்கள் பார்த்து நலம் விசாரித்து வந்தனர்.

தற்போது சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வந்து, திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார், இதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் அங்கு குவிய தொடங்கியுள்ளது.தளபதி நேரில் சந்திக்கும் வீடியோ இதோ