கருணாநிதி, ஜெயலலிதா மரணத்தில் உள்ள ஆச்சரியம் யாரும் நினைத்து பார்க்காத உண்மை

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஜாம்பவான்கள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தனர். இருவரிடமும் சிறு சிறு மன வருத்தம் இருந்தாலும் மக்கள் திட்டங்களை செவ்வனே செய்தனர்.ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவருக்குள்ளும் ஆட்சி, அதிகாரம் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன.இருவரும் பெரும்பாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்த வண்ணம் இருப்பர்.இந்நிலையில் இரு வேறு துருவங்களாக அரசியலில் பயணித்த இருவரது இறப்பில் ஒரு ஒற்றுமை உள்ளது.

அதாவது ஜெயலலிதா இறந்த தினம்- 05.12.2016- இவற்றை கூட்டினால் 2033 என்று வருகிறது.அதுபோல் கருணாநிதி இறந்த தினம் – 07.08.2018- இவற்றை கூட்டினாலும் 2033 என்று வருகிறது.மற்றொன்று இந்த இரு திகதிகளையும் மொத்தமாக கூட்டினால் இரட்டை படை எண் 8 வருகிறது. இதுதான் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை ஆகும். இது போல் ஒரு கணக்கு வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.

மேலும் இவர்கள் இருவர் பயணித்த அம்புலன்ஸையும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார் (வயது 58).  இவர் ‘ஹோமேஜ்’ என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரபலமான தலைவர்கள் மறையும்போது, அவர்களின் உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவதை அவர் தனது கடமையாக கருதி செய்து வருகிறார்.

அந்த வகையில், இப்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடலை தங்க முலாம் பூசிய குளிர்சாதன கண்ணாடிப் பெட்டியில் வைத்து,  ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச்சென்றவர், பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார்தான்.

ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கும், சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கும், தொடர்ந்து ராஜாஜி ஹாலுக்கும் சாந்தகுமார் ஓட்டிச்சென்றார். புதிதாக வாங்கப்பட்ட வெள்ளை நிறத்திலான ‘பிளையிங் ஸ்குவாட்’ ஆம்புலன்ஸ் வாகனம்தான், கருணாநிதியின் உடலை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது.