காதல் இன்றி வாழ்வது சாத்தியமா? இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினத்துக்கும் அது சாத்தியம் இல்லை. காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கால இளைஞர்களோ அதை வேறு கண்ணோட்டமாய் பார்க்கிறார்கள்
காதலுக்கு கண் இல்லை என்பது போல வயதும் இல்லாமல் போய் விட்டது. படிக்கும் வயதில் காதலித்து பாதியில் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.சிலர் வாழ்க்கையில் காதல் வெற்றியை தந்தாலும் பலரின் கல்லூரி காதல் தோல்வியில் முடிகின்றது.இதற்கு பல காரணங்கள் கூறினாலும்.
காதலர்கள் தான் முக்கிய காரணம் . இரண்டு பேர் கல்லூரி வளாகத்திலேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்துள்ளனர். அதனை அவர்களின் நண்பர்கள் சுற்றி நின்று காணொளி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த பலர் இளைஞரின் செயலை வண்மையாக கண்டித்துள்ளனர்.வைரலாகி வரும் அந்த காணொளி இதோ