பெண் ஒருவருடன் உறவில் ஈடுபட்டிருக்கும் போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிரிட்டனில் அரங்கேறியுள்ளது.East Yorkshire-ஐ சேர்ந்த 21 வயதுடைய லவுரா ஹுடிசன் என்ற இளம்பெண் ஜேசன் கேஸ்கெல்(24) என்ற இளைஞருடன் கடந்த பிப்ரவரி மாதம் உறவு வைத்துள்ளார்.அப்போது,ஜேசன் தனது காதலியிடம் வன்முறையாக நடந்துள்ளார் இதனால் கோபமடைந்த லவுரா கண்டித்துள்ளார்,
திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லவுராவை கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லவுரா, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பொலிசார் ஜேசனை கைது செய்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தது.ஆனால் ஜேசனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து, லவுராவின் நண்பர்களும், குடும்பத்தினரும் அதிர்ப்தியில் இருந்தனர்.இது குறித்து லவுராவின் தோழி ஹரான் கூறியதாவது,
இது போல குற்றத்தை செய்தவர்களுக்கு இவ்வளவு சிறிய தண்டனை கொடுத்தது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது எனக் கூறினார்.அத்துடன் சிறையில் இருந்து வெளியில் வந்து ஜேசன் இது போன்ற தவறை மீண்டும் செய்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேட்டுள்ளார்.
இதேவேளை லவுராவின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தவனை மீண்டும் வாழ அனுமதிப்பது தான் சட்டமா? என லவுராவின் குடும்பத்தார் கேள்விகளால் வசைப் பாடியுள்ளனர்.