சென்னை ஆவடி அடுத்த சேக்காடு அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் 65 வயதான இவர் தனது 2வது மனைவி விலாசினியுடன் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார். பெரிய நிலத்துடன் கூடிய அந்த வீட்டை பல கோடி ரூபாய்க்கு விலைக்கு கேட்டு பிரபல கட்டுமான நிறுவனங்கள் அவரை அனுகின ஆனால் ஜெகதீசன் மறுத்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 25 ந்தேதி ஜெகதீசன், அவரது மனைவி விலாசினி ஆகிய இருவரும், இரும்பு குழாயால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த கொலைக்கு பின்னணியில் முன்னதாக ஜெகதீசன் வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தலைமறைவானதால்.
அவரை தேடிச்சென்ற தமிழக காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. சுரேஷ், ஆந்திராவில் பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன் என்று கூறப்படுகின்றது. 27 கொள்ளைவழக்குகளில் தொடர்புடைய சுரேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொள்ளை வழக்கில் கைதாகி சிறைக்கு கொண்டு செல்லும் போது காவல்துறையினரிடம் இருந்து தப்பிச்சென்றுள்ளான். அதன் பின்னர் தனது காதல் மனைவி லட்சுமி மற்றும் 3 வயது குழந்தையுடன் தமிழகத்திற்கு தப்பி வந்துள்ளான் சுரேஷ். அவன் செல்போன் உபயோகிப்பதில்லை என்பதால் அவனை கண்டு பிடிக்க இயலாமல் ஆந்திரா காவல்துறையினர் திணறி வந்தனர்.
இந்த நிலையில் இரட்டை கொலை தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர் கொல்லப்பட்ட விலாசினி கழுத்தில் கிடந்த 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததால், நகை மற்றும் பணத்துக்காக இந்த கொலை நடந்திருப்பதை உறுதி செய்து சுரேஷை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
செல்வந்தர் ஜெகதீசன் வீட்டிற்கு முதலில் சுரேஷை வேலைக்குஅழைத்துச்சென்ற பெரியவரிடம் நடத்திய விசாரணையில் சுரேஷ் சாலையோரம் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்ததாகவும் ,தனக்கு ஓசியில் மது வாங்கி தந்ததால் செல்வந்தர் ஜெகதீசன் வீட்டிற்கு வேலைக்கு அழைத்து சென்றதாக கூறினார்.
அங்கு ஜெகதீசனும் அவரது மனைவியும் தனியாக வசிப்பதை தெரிந்து கொண்டு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று வீட்டோடு வேலைக்கு இருப்பதாக கூறி சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்துள்ளான் சுரேஷ்.வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமேயான நிலையில் வேலைகளை செய்யாமல் ஜெகதீசனையும் அவரது மனைவியையும் நோட்டமிடுவதையே வழக்கமாக வைத்திருந்ததால் சம்பவத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு ஜெகதீஷன் , சுரேசை கண்டித்துள்ளார்.
மேலும் வேலையை விட்டு செல்லும்படியும் எச்சரித்துள்ளார். ஜெகதீசன் உஷாராவதை அறிந்த சுரேஷ், அவரையும் மனைவி விலாசினியையும் இரும்பு குழாயால் அடித்து கொலை செய்து விட்டு நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிஉள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்.