சமீபகாலமாக காமெடி நடிகர்களில் அதிகளவில் பேசப்படுபவர் யோகிபாபு தான். இவரது உண்மையான ப்ளஸ்னா அது இவரோட உருவ அமைப்புனு தான் சொல்லனும். அந்தளவிற்கு இவரது தோற்றம் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் தற்போது அதிகளவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, யோகிபாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது விஜய் 63 படத்திலும் கமிட் ஆகியுள்ளார் யோகி பாபு. அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
மேலும்,நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விவேக் விஜய்யின் இந்த படத்தில் நடிக்க உள்ளார். அதே போல யோகி பாபவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார். அதே போல விஜயுடன் மெர்சல், சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அதனை ரூ 3 லட்சமாக உயர்த்தியுள்ள நிலையில் தற்போது தளபதி 63 படத்தில் நடிக்க ரூ 80 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.