கால்டாக்சியில் தனியாக செல்லும் அழகான பெண்கள் பலாத்காரம்..!!! ஓட்டுனரின் வலையில் IT பெண்கள் சிக்கியது எப்படி..??திடுக்கிடும் பின்னனி

சென்னை கால்டாக்சியில் தனியாக செல்லும் பெண்களை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து வந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஓராண்டாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசாரிடம் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் இரவு நேரங்களில் ஐடி நிறுவனத்தில் வேலை ெசய்யும் பெண்களை அழைத்து செல்லும் கால் டாக்சி டிரைவர்கள் சிலர் பெண்களை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்வதாக அடையார் துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு நள்ளிரவில் தீவிரமாக கண்காணித்தனர்.

ஆனால் குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை. இதற்கிடையே கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் சென்னை மாநகர காவல் துறை மின்னஞ்சலுக்கு தகவல் ஒன்று அனுப்பி இருந்தார். அந்த தகவலை போலீசார் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதில், அந்த பெண், பணி முடிந்து வீட்டுக்கு கால் டாக்சியில் சென்றபோது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு திடீரென கார் சென்றது.

இதுகுறித்து நான் கேட்டபோது காரை டிரைவர் திடீரென கத்தியை காட்டி சத்தம் போட்டால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். பிறகு கடற்கரை சாலையோரம் உள்ள தோப்பில் கார் நின்றது. பிறகு என்னை கார் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்து, பணம், நகைகளை பிடுங்கிகொண்டு மிரட்டி அனுப்பிவிட்டார் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அடையார் துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து கால் டாக்சி டிரைவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மின்னஞ்சல் அனுப்பிய பெண்ணிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது கார் டாக்சி பதிவு எண் மற்றும் டிரைவரின் அங்க அடையாளங்களை தெரிவித்தார். அதன்படி தனிப்படை போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அது நீலாங்கரையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கார் என தெரியவந்தது. சம்பவத்தன்று துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் காரை ஓட்டியது தெரியவந்தது. சுரேஷை பிடித்து விசாரணை நடத்தினர். சுரேஷ் மீது நீலாங்கரை, திருவான்மியூர் காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு வழக்குகள் மற்றும் 2010ம் ஆண்டு பாலியல் வழக்குகள் இருந்தது தெரியவந்தது.

சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, கடந்த ஓராண்டாக அவர் இந்த கொடூரத்தை செய்துவந்தது தெரிந்தது. இரவு நேரங்களில் கால் டாக்சியில் தனியாக ஏறும் அழகான இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து, பாலியல் பலாத்காரம், கூட்டுச்சதி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து டிரைவர் சுரேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கால் டாக்சி டிரைவர் சுரேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த ஓராண்டாக சுரேஷ், டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக வேலை ெசய்து வந்துள்ளார். எப்போதும் சுரேஷ் இரவு நேரத்தில் தான் கார் ஓட்ட வருவார்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாக்களில் நண்பர்களுடன் மது விருந்துகளில் கலந்து கொள்ளும் பெண்கள், போதையில் அவர்களின் கார்களை தனியாக ஓட்டி செல்ல முடியாது என்பதால், கால் டாக்சிகளில் தான் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இதனால் பங்களாக்கள் மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து டிராவல்ஸ் நிறுவனத்திற்கு அழைப்பு வந்தால், இரவு பணியில் உள்ள சுரேஷ் தான் காரை எடுத்து செல்வார். காரை, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிறுத்தி விட்டு பலாத்காரம் செய்வார். வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று நினைத்து இதுபற்றி பல பெண்கள் புகார் செய்வதில்லை. இரவு நேரங்களில் இதுபோன்ற வாய்ப்பு அதிகமாக கிடைக்காது. இதனால் சுரேஷ் ஈஞ்சம்பாக்கம், துரைப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலை செய்யும் அழகான பெண்களை குறிவைத்து

அந்த பெண்களிடம், ‘‘எங்கள் கார் ஓனர் ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கு ₹10 ஆயிரம் மதிப்புள்ள பட்டுசேலை, ₹2000 பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு என்னிடம் உனக்கு தெரிந்த பெண்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார்.

எனக்கு தெரிந்த பெண்கள் யாரும் இல்லை. இதனால் நீங்கள் வந்து அதை வாங்கி கொள்ளுங்கள்’ என்று கூறி அவர்களிடம் செல்போன் நம்பரை வாங்கி கொள்வார். பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு போன் செய்து சுரேஷ் அழைப்பார். ₹10 ஆயிரம் பட்டுபுடைவைக்கு ஆசைப்பட்டு பெண்கள் சிலர் சுரேசுடன் சென்று பலாத்காரத்துக்கு உள்ளாவார்கள். வீட்டிற்கு தெரியாமல் இந்த பெண்கள் வந்ததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இதுபோல் தனது காம லீலைகளை அவர் அரங்கேற்றி வந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.