கில்லி விஜய் அம்மாவுக்கு இவ்வளவு அழகான மகளா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

கில்லி படத்தில் விஜய் செய்யும் குறும்புகளுக்கு சப்போர்ட் செய்யும் அம்மா பாத்திரத்தில் நடித்தவர் ஜானகி சபேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து அசத்துபவர். திரையுலகில், அம்மா கதாபாத்திரம் என்றாலே அது இவருக்குத்தான் கொடுக்கப்படும். அந்தளவிற்கு திறமையாக, இயல்பாக நடிப்பார். இவரின் குணச்சித்திர நடிப்பு அனைத்துவித ரசிகர்களையும் வெகுவாக கவரும். அதற்கு ஒரு உதாரணம் கில்லி படத்தை குறிப்பிடலாம். அந்தளவிற்கு மிக இயல்பாக விஜய்க்கு அம்மாவாக நடித்திருப்பார்.


அவர் செய்யும் குறும்புகளுக்கு அப்பாவிடம் பேசி சமாளிப்பது, தங்கை செய்யும் புகார்களுக்கு சமாளிப்பது என அற்புதமாக நடித்திருப்பார். அதுவும் பொம்மைகளுக்கு இடையே திரிசாவை பார்த்துவிட்டு, அதற்கு ஏதோ குறையுதே என்று ஒரு ஸ்டிக்கர் பொட்டு வைத்து அழகு பார்ப்பதெல்லாம் ஏ ஒன் ரக நடிப்பு. அப்படிப்பட்ட நடிகை ஜானகி சபேஷ் அயன், சிங்கம், பூஜை, பாய்ஸ், வல்லவன், குஷி, மின்னலே, வேட்டையாடு விளையாடு, ரன், ஜோடி, ஆயுத எழுத்து போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த நடிப்பு தனித்திறமையால் இன்றும் கூட ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அத்தகைய திறமை மிகுந்த நடிகையான இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். மகள் பெயர் தவானி சபேஷ். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்கள் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குணச்சித்திர நடிகைக்கு இவ்வளவு அழகான மகளா என இணையவாசிகள் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இதோ படங்கள் உங்கள் பார்வைக்கு !