கீர்த்தி சுரேஷுக்கு என்ன தான் ஆச்சி அவரது தற்போது உடல் நிலையை பார்த்து கவலைப்படும் ரசிகர்கள்…!!! புகைப்படம் உள்ளே.

தமிழ் மொழியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் A .L விஜய் இயக்கத்தில் வெளியான ” இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து “ரஜினி முருகன்”, “ரெமோ”, “பைரவா” போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து குறுகிய காலத்திலையே முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைத்தார்.

கடந்த ஆண்டு வெளியான “நடிகையர் திலகம்” திரைப்படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்து அனைத்து ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது கீர்த்தி சுரேஷ் உடலை குறைத்து ஒல்லியாக உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் உள்ளது கீர்த்தி சுரேஷ் என்று ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். சர்க்கார் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வரும் “பென்குயின்” என்ற திரைப்படம் மட்டுமே கீர்த்தி சுரேஷ் கைவசத்தில் உள்ளது. இந்த படம் 2020 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.