குடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி! வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா? வைரல் புகைப்படம்

இந்தியாவிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவான திரைப்படம் 2.0. ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் இப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று சமீபத்தில் வெளியான 2.O படத்தில் தியேட்டரில் கூட்டமே இல்லாத நேரத்தில் தனது மனைவி லதா மற்றும் பேரப்பிள்ளைகளோடு சத்யம் திரையரங்கில் பார்த்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி குடும்பத்தோடு படம் பார்த்த அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ரஜினி ரசிகர்களும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வந்தனர்.

அந்த புகைப்படத்தில் ரஜினி மற்றும் குடும்பத்திற்கு பின்னால் ஒரு பெண் நின்றுகொண்டே இருந்தார். அந்த பெண் சூப்பர்ஸ்டார் வீட்டில் வேலைக்காரி எனவும் அவர் மொத்த படத்தையும் நின்றுகொண்டே பார்த்தார் என்றும் கூறப்படுகிறது. தியேட்டரே காலியாக ஈ ஓட்டும்போது மொத்த சீட்டுகள் காலியாக இருக்கும் நிலையில் அந்த வேலைக்காரப் பெண்ணை.

அமர வைக்காமல் நிற்க வைத்த பார்க்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூகவலை தளங்களில் தாறுமாறான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், நீங்க போற கார் டிரைவராவது உக்காந்துக்கிட்டு வண்டி ஓட்டலாமா.. இல்ல அவரும் நின்னுக்கிட்டுத்தான் ஓட்டணுமா முருகேசா.. என தாறுமாறாக விமர்சித்துள்ளார்.