குரு பெயர்ச்சி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்படையும்: உங்கள் நட்சத்திரம் இருக்கா?

வாழ்க்கையில் வளமான வாழ்வு வாழ ஆசைப்படும் மகம் நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் உங்களுக்கு பாக்கியத்திற்கு குறைவிருக்காது. முக்கிய நிகழ்வுகளில் நீங்கள் தான் முக்கியஸ்தர்களாக இருப்பீர்கள். திருமண யோகம்,. குழந்தை பாக்கியம், புது மனை வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் வரிசையாக நடக்கும். பண வரவும் சீராக இருக்கும் என்பதால் அவற்றை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள். பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும். தொழிலில் சிறப்பான லாபத்தை அடையப் போகிறீர்கள். சரியான முறையில் முதலீடு செய்வீர்கள், உங்கள் லாபம் இரட்டிப்பாகும். சோம்பல் இன்றி உழைக்கும் எண்ணம் தோன்றும்.

இதனால் உற்பத்தி அதிகமாகும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்த வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு கணவனுடன் இருந்துவந்த சில மனக்குழப்பங்கள் தீரும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெளிவடையுங்கள். மேனேஜ்மென்ட் சம்பந்தமான படிப்புகளில் சிறந்து விளங்குவீர்கள். அரசியல் துறையினருக்கு சில முக்கிய பொறுப்புகள் மேலிடத்திலிருந்து கிடைக்கப்பெறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே அமையும். கலைத்துறையினர் தற்போது கிடைக்கும் ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

பூரம்

சிறந்த அணுகுமுறையுடன் முன்னேறத் துடிக்கும் பூரம் நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் வாழ்வில் நிறைய அனுபவங்களை சந்திக்கப் போகிறீர்கள். பலரின் நட்பும் உங்களுக்குக் கிடைத்து அதில் நல்ல காரியத்தனத்தையும் நிரூபிக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் திருமணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் எதிர்பார்த்திருந்ததை விட சிறப்பான வாழ்க்கை அமையும். உங்கள் மனம் தெளிவடையும். தோற்றப் பொலிவு உண்டாகும்.

தொழிலில் உங்களின் உயர்வு சிறப்பாக இருக்கும். தைரியமாக எதையும் கையாளுவீர்கள். மனதுக்குள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி ஓடுவீர்கள். நேரம், தைரியம், வாக்கு இவை அனைத்தும் உங்கள் வெற்றிக்கு தோள் கொடுக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களின் மேல் வைத்திருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அமையும்

பதவி உயர்வும், பணி இடமாற்றமும் உங்களைத் தேடி வரும். பெண்களுக்கு நஷ்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தொல்லைகள் அகலும்.மாணவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகளும், சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு உங்களின் புகழ் அனைவருக்கும் தெரியவரும். உங்களின் ஒரு செயலால் மிகுந்த பாராட்டினைப் பெறப்போகிறீர்கள். கலைத்துறையினருக்கு பொருளாதார வகையில் உங்கள் நிலை உயரும். நீங்கள் எதிர்பாராமல் சில முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

உத்திரம்

எதிலும் சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாகத் திறனும் உடைய உத்திர நட்சத்திர அன்பர்களே!இந்த குரு பெயர்ச்சியால் நல்ல சுமுகமான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள்.சுபச் செய்திகளும் வரலாம். உண்மையான உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுமுகமான உறவு இருக்கும். இதனால் உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இவை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

தொழில் செய்பவர்களுக்கு சில சவாலான சூழ்நிலைகள் அமையும். ஆனாலும் குருபகவானின் துணையால் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இதனால் உங்கள் புகழ் மட்டுமின்றி தொழிலும் லாபத்தை நோக்கி உயரும். உத்யோகஸ்தர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வேலையை விட்டு இடையில் நின்றவர்கள் மீண்டும் தொடருவார்கள். பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சோம்பல் நீங்கும்.

பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள். மாணவர்கள் வெளியூர் சென்று சில சான்றிதழ் படிப்புகளை படிப்பீர்கள். இது உங்களின் எதிர்கால வேலைக்கு உதவிகரமாக இருக்கும். அரசியல்துறையினர் வார்த்தைகளை சரியான முறையில் பிரயோகப்படுத்துவது அவசியம்.

தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்தாலே சில பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு உங்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும். பிரபலங்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.