கேரளா வெள்ளத்தில் சிக்கி கொண்ட பிரபல நடிகரின் பெற்றோர்: கண்ணீர் விட்டு அழும் உருக்கமான வீடியோ

கண்டேன் காதலை, ராவணன், ஜனனம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகர் முன்னா கேரள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமது பெற்றோரை மீட்டுத் தருமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்முன்னா வெளியிட்டுள்ள வீடியோவில், தமது தாயும் தந்தையும், திருச்சூரில் வெள்ள நீர் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கும்.

ஒரு தேவாலயத்தில் சிக்கியுள்ளதாகவும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 பேர் அங்கு உணவு, குடிநீர் இன்றி சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்இன்று தமது தந்தையின் பிறந்தநாள் என்றும், இந்த வீடியோ மூலம் அவருக்கு உணவாவது தம்மால் வழங்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தபோது அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

மேலும் அங்குள்ள மக்கள் உணவு உடை இன்றி அவதி படுவதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது.தன் தந்தையை பிறந்தநாள் அன்று இப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் பார்க்கும்போது மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது என்றார்.

முன்னா பேசிய வீடியோ நெஞ்சை உருக்குவது உள்ளதை தொடர்ந்து இணையத்தில் வைரலாகியுள்ளது.