சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்…,!! கல்லூரி வாசலில் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்’ நிமிடங்கள்

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் சினிமா பாணியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் இன்று காலை 11 மணி அளவில் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை மர்மக் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன்னும் சிலர் இந்தச் சம்பவத்தை சினிமா படஷூட்டிங் என முதலில் கருதினர். அதன்பிறகுதான் அது நிஜம் என தெரிந்ததும் அவ்வழியாகச் சென்றவர்கள் தலைதெறிக்க அலறியடித்து ஓடினர்.

விசாரணையில் குமரேசன் என்ற ரவுடிதான் கொலை செய்யப்பட்டவர் என தெரியவந்தது. குமரேசனைக் கொலை செய்தவர்கள் யார், யார் என்று அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. எங்களின் முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாகத்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. ஸ்கெட்ச்’ போட்டு குமரேசனை அவரின் எதிரிகள் கொலை செய்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.