டேய் நான் உன் அண்ணிடா? கதறிய பெண்! அண்ணன் சொல்லித் தான் செய்றேன்! அதிர வைத்த கொழுந்தன்! டிக்டாக் விபரீதங்கள்!

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், நசரத்பேட்டையை சேர்ந்தவர் சித்தலா சின்ன நரசையா. இவரது மனைவி  சுவர்தா. 19 வயதான சுவர்தாவுக்கு, பெண் குழந்தை உள்ள நிலையில், டிக்டொக்கில் அடிக்கடி வீடியோ வெளியிடுவதும், அதிலேயே நேரம் செலவிடுவதும் என முழுக்க முழுக்க டிக்டொக் அடிமையானார்.

அவரது செயல் எல்லை மீறி போவதை கண்டித்த கணவர் சித்தலா அடிக்கடி இதுபற்றி சண்டையிட்டும் வந்துள்ளார். ஆனாலும், சுவர்தா இதுபற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சில நாட்கள் முன்பாக, சண்டையின் உச்சக்கட்டத்தில் சுவர்தா, வீட்டை விட்டு வெளியேறி, அருகாமையில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து, மனைவி சுவர்தாவை கணவர் சித்தலா சமாதானம் பேசி, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பிறகு தனது மனைவியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த சித்தலா, தனது தம்பியின் உதவியுடன் திட்டம் தீட்டினார். இதன்படி, கடந்த நவம்பர் 17ம் தேதி சித்தலாவை வீட்டுக்கு வரவைத்து துண்டை போட்டு இறுக்க,. சில நிமிடங்களில் சுவர்தா உயிரிழந்துள்ளார் பின் அவரது சடலத்தை உடனடியாக, உள்ளூர் சுடுகாட்டில் வைத்து சாம்பலாகியுள்ளனர்.