தாயின் கொடுமைக்கு ஒரு எல்லை இல்லையா ..அப்படி என்ன பிள்ளையை விட நீங்களே பாருங்கள் கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்.

ஒரு கிராமத்தில் தன் ஒன்றறை வயது மகனை கூட்டிக்கொண்டு ஒரு தாய் ஆற்றிற்கு குளிக்க சென்றாள். ஆற்றங்கரையில் மகனை உட்கார வைத்து விட்டு துணிகளை துவைக்க தொடங்கினாள். சற்று நேரத்தில் ஆற்று நீரில் ஏதோ பளபளப்பாக மிதந்து வருவதை கண்டு வேகமாக நீந்தி சென்று அதை போய் அடைந்தாள்.

ஆனால் அது ஏதோ ஒரு மினுமினுப்பான கலர் பேப்பர் என அறிந்து அதை விட்டு விட்டு கரைக்கு வந்தாள். வந்தால் கரையில் உட்கார வைத்திருந்த பிள்ளையை காணவில்லை. பதறி போய் எல்லா இடத்திலும் தேடினாள். அந்தோ பரிதாபம், பிள்ளை ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டிருந்தான். பிள்ளையை விட ஏதோ தேவையில்லாத காரியத்தின் மேல் முக்கியம் என்று நினைத்து போய் பிள்ளையை இழந்தாளே! இன்று அநேக தாய்மார்களுக்கு பிள்ளையை விட ஆபீஸ் வேலை, தொலை காட்சி சீரியல்கள், அண்டை வீட்டாரோடு அநாவிசிய பேச்சு போன்றவை தான் முக்கியமாக தோன்றுகிறது.

பிள்ளைகள் பள்ளிக்கு சென்ற உடன், வேகவேகமாக சமையலை முடித்து விட்டு, டிவி பெட்டிக்கு முன் உட்கார்ந்து வரிசையாக சீரியல் பார்க்கும் தாய்மார்கள் அநேகர் உண்டு. தாங்கள் சீரியலை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பிள்ளைகளை டியூஷன் அனுப்பும் தாய்மார்கள் உண்டு. டிவி காரர்கள், தாங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கதைகளை சீரியல் என்று போட்டு காட்டி கொண்டு இருக்கிறார்கள். அதை வேலையை விட்டு பார்க்கும் நம் தாய்மார்களை என்னவென்று சொல்வது? தாங்கள் ஊர்க்கதை பேச வேண்டும் என்பதற்காகவே அந்த நேரத்தில் பிள்ளைகளை நீ போய் டிவி பாரு என்று சொல்லும் தாய்மார்களும் உண்டு.

பிள்ளைகள் தவறு செய்யும்போது கடிந்து கொணடு புத்தி சொல்லி தேவைப்படும் போது பிரம்பை கையாடுகிறவளாயும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அன்போடும், பொறுமையோடும் நடந்து கொள்ளுகிறவளாயும் திகழ வேண்டும். பிள்ளை வளரும்போது அவர்களுக்கு தேவையான சத்தான சுகாதாரமான உணவை வீட்டிலேயே தயாரித்து கொடுங்கள். பிள்ளை போதுமென்ற பின் கட்டாயமாக திணிக்காதீர்கள். நீங்கள் ஒரளவு படித்த தாய் என்றால் பிள்ளையை டியூஷனுக்கு விரட்டாமல் வீட்டிலேயே புரிந்து கொள்ளும் விதத்தில் பாடங்களை செயல் முறையோடு சொல்லி கொடுங்கள். பெண் பிள்ளைகளாய் இருந்தால் அவர்கள் என்ன உடுத்துகிறார்கள், எப்படி உடுத்துகிறார்கள் என்பதில் தனி கவனம் செலுத்துங்கள். அவள் ரொம்ப பேஷன் என்று சொல்லி, தேவையில்லாத உடலை காட்டக்கூடிய உடைகளை வாங்கி தராதீர்கள். அதற்காக பிள்ளை உங்களிடம் கோப பட்டால், கண்டிப்பாய் இருங்கள். பிள்ளைகளின் உடல் சுத்தத்தை குறித்து கற்று தாருங்கள். தலையை எப்படி வார வேண்டும், சுத்தமாய் வைத்து கொள்ளவேண்டும் என்று கற்று தாருங்கள். பிள்ளை வளர்ப்பது பணிப்பெண்ணின் வேலை என்று எண்ணி, பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விடாதீர்கள். இவை அனைத்தும் ஒரு நல்ல தாய் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உண்டான வழிமுறைகள்.

ஆனால் வீடியோ பதிவில் உள்ள பெண்.தாய் அந்தஸ்துக்கு தகுதியற்றவள் தன் பிள்ளையின் அழுகுரலை கேட்டும் அவளுடைய சிந்தனை அந்த சீரியலில் தான் உள்ளது இது போன்ற தாய்மார்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பது கண்டனத்திற்கு உண்டானது.