இறந்து கிடந்த பிரபல நடிகரின் சடலத்துடன் செல்பி எடுத்த மருத்துவ ஊழியர்கள்: வெளியான அதிர்ச்சி புகைப்படம்

தெலுங்கு சினிமாவில் 2 நாட்களுக்கு முன் ஒரு அதிர்ச்சியான மரண செய்தி. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி ராமாராவின் மகனும், தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா,நெல்லூரில் நடைபெற்ற ரசிகர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் இன்று(ஆகஸ்ட் 29) காலை கலந்து கொண்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி – அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது,

ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹரிகிருஷ்ணாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்

இந்நிலையில், இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இவரது சடலத்துடன் அங்கு பணியாற்றிய செவிலியர்கள் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் ஒரு நடிகராக இருந்தாலும், சடலத்துடன் செல்பி எடுப்பது மனிதாபிமானமற்ற செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.வைரலாகும் அந்த புகைப்படம் இதோ