ஶ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திலிருந்தே அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. ஶ்ரீதிவ்யா தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிக பெரிய வெற்றி அடைய அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களை நடிக்க தொடங்கினார்.
ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். ரெமோ படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ஶ்ரீதிவ்யா. தற்போது ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது. 2003 ஆம் ஆண்டு யமுனா என்ற திரைப்படத்தில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாம்.
கவர்ச்சியில் புகுந்து விளையாடி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகை ஸ்ரீ திவ்யா தமிழில் கவர்ச்சி இல்லாமல் கலக்கியவர். ஆனால் அவரது தங்கையோ கவர்ச்சியில் வெளுத்து வாங்கியுள்ளார். இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே என ரசிகர்கள் தற்போது இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.