திட்டுவாங்க தான் எனக்கு சம்பளம் கொடுக்குறீங்களா? பிரபல நிகழ்ச்சியில் கொந்தளித்த ரியோ..! வைரலாகும் வீடியோ

தமிழில் பல என்டர்டெயன்மென்ட் நிகழ்ச்சிகள் கொடுத்து வழங்கும் பிரபல ரிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல், ஆடல், பாடல், காமெடி நிகழ்ச்சிகளுக்கு என அனைத்திற்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, சீரியலில் நடிகராக பிரபலமானவர் தொகுப்பாளர் ரியோ. தற்போது Ready study Po என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அதிகப்படியாக பெண்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது 2 பெண்களிடம், பெண்களிடையே போட்டி நடத்தப்பட்டது. குறிப்பிட்ட டாஸ்க் தன்னால் செய்ய முடியாது என ஒரு பெண் புறக்கணிக்க, எதிர் தரப்பில் விளையாடிய பெண் விளையாட்டு என்றால் விளையாடிதான் ஆக வேண்டும் என குரலை உயர்த்தி பேசினார்.இதனால் இரு பெண்களிடமும் சண்டை வருகிறது. இவர்களிடம் நடக்கும் சண்டை சமாதானம் செய்யப்போன, ரியோவை போட்டியாளர் பெண் தாக்கி பேசியதால் என்னவோ கோபமடைந்த ரியோ

நிகழ்ச்சியிலேயே திடீரென இதற்கு யார் கோ-ஆர்டினேட்டர்? இவர்களிடம் திட்டுவாங்க தான் சம்பளம் கொடுக்குறீங்களா? என மிகவும் கோபமாக கத்தும் காட்சி ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

இது உண்மையான சண்டையா? இல்லை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை கலாய்ப்பதற்காக போடப்பட்ட சண்டை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.