திருமணமான சில மணி நேரத்திலே 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூரை அடுத்த சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து உறவினர்கள் மற்றும் பெற்றோர் இருவருக்கும் கோவிந்தபாடியில் உள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சிறிது நேரத்திலே மணப்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், இன்னும் சில மணி நேரத்தில் குழந்தை பிறக்கும், என்றும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை சரவணன் அதிர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும் சிறுமியை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அன்று இரவு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணமான சில மணி நேரத்திலே குழந்தை பிறந்தால், மாப்பிள்ளை சரவணன் தன்ன்னை இப்படி ஏமாத்திவிட்டீங்களே என்று அழுதுள்ளார்.
திருமணமான அன்றே மணப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால், இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதே சமயம் மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக சரவணன் மீதும் நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.