பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட வயதில் குறைந்த அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜான்ஸ் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இந்நிலையில், நீண்ட காலமாக வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த இவர்களது காதல் வெளி உலகத்திற்கு தெரிந்த சில தினங்களிலேயே திருமணத்திற்கு சென்றது. கடந்த ஞாயிற்று கிழமை டிசம்பர் 1 ஆம் திகதி பிரியங்கா சோப்ராவிற்கும் நிக் ஜான்ஸ்க்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.
இதேபோல், கடந்த 2 ஆம் தேதி காலை, இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பல்வேறு திரை கலைஞர்களும் பங்குபெற்றனர். இந்நிலையில், ஊரே புகந்து பேசுமளவிற்கு கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தின் மூலம் பிரியங்கா சோப்ராவிற்கு தற்போது பீடடா அமைப்பால் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது, பிரியங்கா சோப்ராவின் திருமணத்தில் குதிரைகள் மற்றும் யானைகள் பயன்படுத்தபட்டதாக பீட்டா அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து பீட்டா அமைப்பின் அதிகாரி தெரிவிக்கையில், திருமணத்திற்காக குதிரைகளும், யானைகளும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது.
பல மக்களும் தங்கள் திருமணத்தில் விலங்குகளின் மீது சவாரி செய்வதை தவிர்த்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியான வீடியோ பதிவு இதோ
Dear @priyankachopra and @nickjonas. Eles 4 weddings live n chains & horses r controlled w whips, spiked bits. Ppl r rejecting ele rides: https://t.co/Gea5jvP6LP & having horse-free weddings. Congrats, but we regret it was not a happy day for animals. pic.twitter.com/p9FFeJ969B
— PETA India ❤️❤️ (@PetaIndia) 3 December 2018