நடுரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்…!!!

நடிகர் நடிகைகள் வாழ்க்கை என்பது பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் நிறைந்தது, சமீபகாலமாக சினிமா நடிகர்களின் தற்கொலை அதிகரித்து கொன்டே போகிறது குறிப்பாக பல நடிகர்களின் மரணம் தற்கொலையா..? அல்லது கொலையா..? என்று விடை கிடைக்காமலே முடிந்துள்ளது,இந்நிலையில் பிரபல நடிகர் நடுரோட்டில் மர்மமான  முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜூகல் அகமது மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.அசாம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான அகமது இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் விழுந்து கிடந்தார்.அருகிலிருந்தவர்கள் அகமதை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சாலை விபத்தில் சிக்கி அகமது உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.இதை ஏற்றுக்கொள்ளாத அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள்

அகமத்தின் மரணம் விபத்தல்ல சிலர் திட்டமிட்டு கொலை செய்ததாக பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தலைமறைவாகியுள்ள அகமத்தின் நண்பர் கணேஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.