அமெரிக்காவில் நண்பரை நம்பி வீட்டில் தங்க வைத்த நிலையில், அந்த நபர் 8 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள புகைப்படங்களைப் பார்த்து தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவின் அலபமா மாகாணத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் வீட்டில் தங்க வைத்திருந்த Michael Tays என்பவரின் போனை கடந்த புதன் கிழமை எதார்த்தமாக பார்த்துள்ளார். அப்போது அந்த போனில் இருந்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அந்த நபர் அவரின் 8 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தான் அந்த நபர் தன்னுடைய போனில் வைத்துள்ளான்.
இதனால் அவர் உடனடியாக அவர் Michael Tays-ஐ வெளியேற்றியதுமட்டுமின்றி, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் பொலிசார் விசாரணை மேற்கொண்டு அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், குழந்தையின் தாய் ஒரு அங்கிருக்கும் லோகல் பகுதியில் தொழில் செய்து வருகிறார்.
இதனால் தன்னுடைய பணி நிமித்தம் காரணமாக வெளியில் செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும், இந்த நபர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அவரின் வீட்டில் தங்கி வந்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மீது 12 வயதிற்கும் குறைவான குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், குற்றம் மட்டும் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 50 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும் என்று கூறப்படுகிறது.