எனக்கு இத்தனை கோடி வேண்டும்..!! கற்பை ஏலத்தில் விட்ட 22 வயது மாணவியின் அடுக்கடுக்கான காரணம்

பிரேசிலைச் சேர்ந்த மாணவி கடன் மற்றும் படிப்பிற்காகவே தன்னுடைய கற்பை ஏலத்தில் விட்டுள்ளதாக கூறியுள்ளார்.பிரேசிலைச் சேர்ந்தவர் Danielle Breene. 22 வயதான இவர் கடந்த ஜுன் மாதம் ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்கினார்.அதில் தன்னுடைய கற்பை ஏலத்தில் விடுவதாகவும் கூறியிருந்தார். அதிக ஏலத்தில் எடுப்பவர்களுக்கு நான் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் பிரபல ஆங்கில்நாளிதழ் ஒன்றிற்கு Danielle Breene அளித்த பேட்டியில், நான் தற்போது எடுத்துள்ள முடிவு சரியான முடிவாகத்தான் இருக்கும்.

ஏனெனில் இது போன்ற முடிவை பல பெண்கள் எடுத்துள்ளதை அறிந்துள்ளேன். அதுமட்டுமின்றி நிறைய கடன் இருக்கிறது.அம்மா என் தங்கையுடன் வாழ்வதற்கு அழகான வீடு, அதன் பின் படிப்பதற்கு வாங்கிய லோனை கட்ட வேண்டும் போன்றவைகளும் காரணம் என்று கூறியுள்ளார்.மேலும் அவர், நான் தற்போது வரை யாருடனும் டேட்டிங் சென்றதில்லை, இது எனக்கு கூச்சமாகத் தான் இருக்கிறது.

இருப்பினும் ஏலத்தில் வென்று வரும் நபர் ஒரு ஜென்டில் மேனாக இருப்பார் என்று நம்புகிறேன்.என்னுடைய முக்கிய காரணமே பொருளாதார பிரச்சனை தான், பார்க் டைமில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன். எங்கள் நாட்டில் பணம் மிகவும் முக்கியமானது.

கடன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் போகிறது தவிர குறைந்த பாடில்லை. நான் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வீடு வாங்குவேன், அதில் தங்கை, அம்மாவை தங்க வைப்பேன், கடனை அடைப்பேன், இதுவே சாதரணமாக இருந்தால், நான் இதை எல்லாம் அடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

அதன் பின் சொந்தமாக தொழில் செய்வேன், என்னுடைய எதிர்காலம் முக்கியம், அதை பாதுக்காப்பாக இருக்க வேண்டும்.இதுவரை இரண்டு பேர் கேட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக £220,000(இலங்கை மதிப்பு 1,95,73,221 கோடி ரூபாய்) வந்துள்ளது. ஆனால் நான் £750,000 (இலங்கை மதிப்பு 15,35,03,983 கோடி ரூபாய்) எதிர்பார்க்கிறேன். அப்படி வந்தால் மட்டுமே நான் நினைத்தை முடிக்க முடியும்.

இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளேன். நான் உறுதி செய்த பின் அந்த நபரை பார்க்கச் சென்றால் பாடிகார்டுடன் தான் செல்வேன். ஏனெனில் எனக்கு பாதுகாப்பு முக்கியம். என்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் குறித்த இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன்.இந்த முடிவைப் பற்றி நான் என் குடும்பத்தாரிடம் சொல்லவில்லை. அதன் காரணமாகவே முகத்தை மட்டும் மறைத்த நிலையில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளேன்.

என் பெண் தோழி ஒருத்திக்கு மட்டுமே தெரியும், அவள் முதலில் பயந்தாள். ஏனெனில் இது ஒரு ஆபத்தானது என்றாள், ஆனால் நான் அவளிடம் பாதுகாப்பைப் பற்றி கூறிவிட்டேன்.தற்போது அவள் மட்டுமே எனக்கு உதவியாக இருக்கிறாள். எனக்கு இந்த உலகில் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, ஆனால் குடும்பத்தினருக்கு தெரிந்தால் தான் சற்று பயமாக இருக்கிறது.

இதை எல்லாம் தெரிந்து ஒருவன் வந்தால், நன்றாக இருக்கும், அப்படி இல்லை என்றால் அவனும் தேவையில்லை எனக்கு என் குடும்பமே முக்கியம், அதனால் இந்த முடிவைப் பற்றி எந்த ஒரு பயமும் இல்லை, இது மட்டும் சரியாக நடந்தால் என் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.