பாத் ரூமில் குளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி.!! எச்சரிக்கை… உங்களுக்கும் இது போன்று நடக்கலாம்.!

பிரான்ஸ் நாட்டில் உள்ள கீரின்பெல் என்கின்ற பகுதியில் மிஷா என்கின்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். சமப்வம் நடந்த அன்று வேலை முடிந்து வீடு திரும்பிய மிஷாவின் கணவர் பல முறை கதவை தட்டியபோதும் மனைவி திறக்காததால், கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அப்போது, அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதனுடன் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மிஷா மயங்கி விழுந்த இடத்திற்கு அருகே அவரது செல்போன் சார்ஜிங் நிலையில் இருந்துள்ளது. ஈர கையுடன் மொபைல் சார்ஜரை தொட்டதால் அவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் போன் சார்ஜர் ஷாக் அடிக்காது என்று சிலர் விவாதம் செய்யலாம். ஆனால்., துரதிஷ்ட வசமாக இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த செய்தி உங்கள் பயனுள்ளதாக தோன்றினால் நண்பர்களுடன் பகிருங்கள்