செந்தில் மற்றும் ராஜலஷ்மி பிரபல தொலைக்காட்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமான தம்பதியினர். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அதுமட்டுமின்றி பல மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாட்டில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர். அதே போன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வென்று வெற்றியைத் தட்டிச் சென்றவர் தான் ரித்விகா.. தற்போது ரித்விகா, பாலாஜி, செந்தில், ராஜலட்சுமி அனைவரும் பாரிஸிற்குச் சென்றுள்ளனர். ஈபிள் டவரை ரசித்த வண்ணம் இருக்கும் ரித்விகா படுபிஸியாகவே இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.