பிரபல தொகுப்பாளினியுடன் தகாத உறவு! மனைவி, மகளை கொடுமைபடுத்திய பிரபல சீரியல் நடிகர் தாயுடன் புழல் சிறையில் அடைப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஈஸ்வர் ரகுநாதன். இவரது மனைவி ஜெயஸ்ரீ. வடபழனி காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீ கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது. எனது கணவர் கடந்த சில நாட்களாகவே என்னை தாக்கி துன்புறுத்துகிறார். மேலும் என்னையும் எனது மகளையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு மிரட்டுகிறார். மறுத்தால் சித்ரவதை செய்கிறார். இதற்கு எனது மாமியாரும் உடந்தை. என் கணவனுடன் சேர்ந்து அவரும் என்னை தாக்குகிறார்.

எதற்காக எனது கணவன் இப்படி நடந்து கொள்கிறார் என்று நான் தெரிந்து கொண்டேன். அப்போது தான் நடிகை மகாலட்சுமிக்கும் எனது கணவருக்கும் தகாத உறவு இருப்பது தெரியவந்தது. மேலும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ளவே என் கணவன் என்னை துன்புறுத்துகிறான். இவ்வாறு ஜெயஸ்ரீ அந்த புகாரில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் மனைவியை துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


ஈஸ்வருடன் தகாத உறவு என்று அவரது மனைவி குறிப்பிடம் மகாலட்சுமி சன் மியுசிக் தொலைக்காட்சியின் பிரபல விஜேவாக இருந்தவர். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தற்போது வரை மகாலட்சுமி எதுவும் கூறவில்லை.