தமிழகத்தின் கோவை தம்பதியின் வித்தியாசமான திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் நடக்க போவது என்றால் அதற்கு முக்கிய தேவையாக திருமண அழைப்பிதழ்கள் உள்ளன. அதாவது அழைப்பிதழை கொடுத்து தான் நண்பர்கள், உறவினர்களை திருமணத்துக்கு அழைப்போம். இந்நிலையில் தமிழகத்தின் கோவையை சேர்ந்த ஒரு தம்பதியின் திருமண பத்திரிக்கை சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு காரணம், திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருபவர்களுக்கு சைடிஸ் உடன் மது இலவசமாக வழங்குவதாக குறிபிடப்பட்டுள்ளதே ஆகும்.
வரும் பிப்ரவரி 5ம் திகதி கோவையில் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் திருமணம் ஆனவர்களுக்கு சைட்டிஸ் உடன் ஒரு குவாட்டரும், திருமணம் ஆகாதவர்களுக்கு சைட்டிஸ் உடன் இரண்டு குவாட்டர்களும் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அழைப்பிதழ் உண்மையில் உருவாக்கப்பட்டதா அல்லது சமூக வலைத்தில் வைரலாக போலியாக உருவாக்கப்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.