மனைவியின் வாட்ஸ் அப்பால் வந்த வினை! பார்த்தவுடன் உயிரை விட்ட கணவன்..வெளியான பின்னணி!

இந்தியாவில் மனைவி தொடர்ந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து கொண்டிருந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் பெட் பஷீர்பத் கிராமத்தை சேர்ந்தவர் சரண்தேஜ் ரெட்டி (25) ஆட்டோ ஓட்டுனரான இவரும் பவானி என்ற பெண்ணும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பவானி தொடர்ந்து வாட்ஸ் அப்பில் யாருக்கோ மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

இது தொடர்பாக கணவன் – மனைவி இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் பவானி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக மன வேதனையடைந்த சரண்தேஜ் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சரண்தேஜின் குழந்தை அருகில் அழுது

கொண்டிருந்த நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அருகில் வசிப்பவர்கள் சரண்தேஜ் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சரண்தேஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.