முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தற்போது ஓ பன்னீர் செல்வத்திற்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். ஜெயலலிதா இறந்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்ட நிலையில் இன்னும் அவரது மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. இது வரையிலும் அவருடைய மரணத்திற்கு தீர்வு கிடைத்த பாடில்லை.
முன்னதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தீபா கணவர் மாதவன், தீபா, அரசு மருத்துவர் பாலாஜி, க்ருஷ்ணபிரியா, விவேக், திவாகரன் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. இதில் சிலரிடையே குறுக்கு விசாரணையும் நடந்தது. இவர்களை தொடர்ந்து ஜெயலலிதா குடும்ப மருத்துவர் சிவகுமார், ஆளுநர் மாளிகையின் அலுவலக ஊழயர் சீனிவாசன், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்களை வக்கீல் ராஜா செந்தூரபாண்டியன் என்பவர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் மருத்துவர் சிவகுமார் கடந்த 2016 செப்டம்பர் 27ஆண்டு ஜெயலலிதா பேசிய 52 வினாடிகள் கொண்ட ஆடியோ ஒன்றை அறுமுகசாமியிடம் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மூச்சு திணறலுடன் பேசிய 52 வினாடிகள் கொண்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவில் ஜெயலலிதா மூச்சு திணறலுடன் மருத்துவர் சிவகுமார் மற்றும் மருத்துவர் அர்ச்சனா ஆகியோருடன் உரையாடுகிறார்.
இந்த ஆடியோவில் மருத்துவர் அர்ச்சனா ரத்த அழுத்தம் 140/80 உள்ளதாக கூறுகிறார். அது எனக்கு நார்மல் தான் என்று ஜெயலலிதா கூறுகிறார். பின்பு ஆடியோ பதிவு சரியாக இருக்கிறதா என்று ஜெயலலிதா கேட்க சிறப்பாக இல்லை, வேற அப்ளிகேஷன் டவுன்லோட் செய்கிறேன் என்று மருத்துவர் சிவகுமார் கூறுகிறார். திரையரங்கில் முதல் வரிசையில் உள்ள ரசிகன் விசிலடிப்பதை போன்று மூச்சு விடுகிறேன் என கூரியுள்ளார்.வைரலாகி வரும் அந்த ஆடியோ பதிவு இதோ