பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர்கள் நடிகை ஐஸ்வர்யா, மஹத், யாஷிகா தான். நிகழ்ச்சியின் போது தனக்குள் ஏற்பட்ட காதலை மஹத்திடம் யாஷிகா வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதனால் நிகழ்ச்சியின் பேசுபொருளாக இருவரும் மாறியிருந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்ததற்கு பின்பும் இவர்களுக்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மகேஷ் – வெங்கடேஷ் இணைந்து இயக்க உள்ளனர். படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டதுஇதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்