திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழை பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் துக்கம் தாங்காமல் கண் கலங்கி அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர்.
இதனிடையே கருணாநிதியி இறப்பு சான்றிதழில் கருணாநிதியின் வயது, இறந்த தேதி, இறந்த இடம், தாய், தந்தையின் பெயர்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மனைவியின் பெயர் என்ற இடத்தில் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு பெயர் இடம்பெற்றுள்ளது.
அவருக்கு தயாளு அம்மாள் இரண்டாவது மனைவி தான் மொத்தம் மூன்று மனைவிகள் உள்ள நிலையில்.தயாளு அம்மாளின் பெயர் மற்றும் இருப்பது சற்று வேடிக்கையான விஷயம் தான்.மேலும், இறப்பு பதிவில் சென்னை கோபாலபுரம் இல்லத்தின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கலைஞர் அவர்கள் இந்திய அரசியலில் ஒரு பெரும் புள்ளியாக கருதப்பட்டார்.அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய புகழ் வானெங்கும் பரவி இருக்கிறது.