அடப்பாவமே..! முழுகவச உடையில் அவசரமாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்… மக்களின் கேள்விக்கு பிரபல டிவி கொடுத்த பதில்..!

நிவர் புயல் பிக் பாஸ் வீட்டையும் சும்மா விடவில்லை. வீட்டுக்குள்ளே வெள்ளம் வந்து விட்டது, என ஏகபட்ட தகவல்கள், செய்திகள் பரவின. ஆனால், நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிக் பாஸ் போட்டியாளர்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர். அதன் அறிவிப்பை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சொல்லும் காட்சியும் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இரவு 7 மணிக்கு போட்டியாளர்கள் அனைவரும் முழுகவச உடையுடன், தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

பின்பு காலை 8.30 மணியளவில் போட்டியாளர்கள் உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு பிரபல ரிவியில் ஒளிபரப்புவார்களா? என்ற மக்களின் கேள்வி தற்போது உண்மையாகி நேற்றைய தினத்தில் அதனை ஒளிபரப்பவும் செய்துள்ளனர்.

மேலும் அய்யோ, நமக்கே இப்படின்னா, வீட்ல இருக்கிறவங்க நிலைமை என்ன ஆகும் என அனிதா சம்பத் அந்த அறிவிப்பை தொடர்ந்து அலறினார். பிக் பாஸ் விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும், பாதுகாப்பான இடத்திற்கு போட்டியாளர்கள் செல்ல வேண்டும் என்றும் பிக் பாஸ் பணித்தார்.

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போதே, பக்கா சேஃப்டியுடன் செல்வது போல சீன் போட்டு கிளம்பிய போட்டியாளர்கள் மறு நாள் காலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததை போல நல்லாவே டிராமா பண்ணார்கள் என்றும், அவ்வளவு சீக்கிரமாக வர வாய்ப்பில்லை என்றும், அவை முன்கூட்டியே எடுத்த காட்சிகள் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பறிமாறி வருகின்றனர். எப்படி இருந்தாலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் சேஃப், நாளைக்கு கமல் வருவது நிச்சயம்.