அடேங்கப்பா.. இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல… ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..

இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி, வருகின்ற 12ஆம் தேதி வெளியாகவுள்ள “விருமன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தான் தமிழ் சினிமாவுக்கு இவரின் அறிமுக படம். மேலும், நடிகர் சூர்யாவின் தம்பை நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் “விருமன்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபல நடிகராக வளம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து “மாவீரன்” படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை அதிதி.

இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை அதிதி ஷங்கருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவருடைய நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட திரையில் வெளியாகாத நிலையில், ஒரு அறிமுக நடிகைக்கு ரூ. 25 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது எப்படி எனும் விமர்சனம் தமிழ் திரைத்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.