இன்றைய நிலையில் தொலைக்காட்சி தொடர்கள் பல ஒளிபரப்ப படுகின்றன, அவற்றுள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெரும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர் என்னும் நிகழ்ச்சி என்பதை மறுக்க முடியாது. இந்த நிகழ்ச்சி பல திறமையான பாடகர்களை உருவாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் நல்ல பிரபலமானவர்கள் தான் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி.

சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி கிராமத்து மண்வாசனையை பாடல்கள் மூலம் உலகறிய செய்தவர்கள் என்று கூட சொல்ல்லாம். ஊரடங்கிலும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வீட்டுக்குள் இருப்பது ஒன்றுதான் பாதுகாப்பு என்று அறிவுருத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரே பொழுது போக்கான விடயம் என்றால் சமூகவலைத்தளம் தான். தற்போது ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமியின் அழகிய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

