அடேங்கப்பா .. ‘ப்ரேமம்’ படத்தில் நடித்த குழந்தையா இது..? என்ன இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்க..

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ப்ரேமம். இந்த படம் வெளியாகி சில நாட்களில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது, மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் “ப்ரேமம்” தென்னிந்திய சினிமாவில் யாரும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாத படம். இப்படத்தில் நடித்த அனைத்து ஹீரோயின்களுமே தற்போது முன்னணி நடிகையாகி விட்டனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மடோனா செபாஸ்டின் மற்றும் நடிகை அனுபமா ஆகியோர்களுக்கு உண்டு.

அதிலும் நடிகை சாய் பல்லவி உச்சத்தில் உள்ளார், இந்நிலையில் ப்ரேமம் படத்தில் சிறு வயது மடோனாவாகவும், அனுபமாவுடன் பள்ளிக்கு செல்லும் குழந்தையாக ஒரு சிறுமி வருவார். அவர் தற்போது நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார், அவரின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது …