மெர்சல் படம் தான் இப்போது இந்தியா முழுக்க ஒரே பேச்சாக உள்ளது. அந்த அளவுக்கு மெர்சலான ஒரு படத்தை கொடுத்த அட்லியின் சொந்த ஊர் மதுரை.ஆனால் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். சொந்த பெயர் அருண் குமார். சினிமாவுக்காக அட்லி என மாற்றி கொண்டார் சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தார். இவரது தந்தை மூலமாக டைரக்டர் ஷங்கரிடம் துணை இயக்குனராக சேர்ந்தார். எந்திரன் முதல் நண்பன் வரை அவரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்தார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. முதல் படத்திலேயே பெரிய ஹி ட் கொடுத்த அவர் அடுத்தடுத்து இளைய தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார்.

அதில் பெரிய வெற்றியும் கண்டார். அடுத்து அட்லீ யாருடன் இணைவார் என எதிர்ப்பார்த்த நிலையில் அவர் பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் கதை தேர்வு வேலைகளில் படம் இன்னும் இருப்பதால் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

அண்மையில் அட்லீயின் மனைவி க ர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வந்தன, ஆனால் எதுவும் உறுதியாக வரவில்லை.
