அதிக விலையில் கொடுத்து முன்னணி நிறுவனம் வாங்கிய அனுஷ்காவின் புதிய படம்! படத்தின் கதை இதுதானாம்..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவில் விஜய்யின் வேட்டைக்காரன், சூர்யாவின் சிங்கம், அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற பல்வேறு படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை கொண்டவர். அவரின் பாகுபலி தேவசேனா கதாபாத்திரத்தை இன்னும் யாரும் மறக்கவில்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறிப்பிட்ட சில கதைகளை அவர் தேர்தெடுத்து நடித்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் கொண்டுள்ளார். அவரின் திருமணம் குறித்த கிசுகிசுக்கள் ஒருபக்கம் இருந்தாலும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் லைசென்ஸ் என்ற படத்தில் அவர் காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாதவன் ஹீரோவாக நடிக்க, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்தியர்கள் 4 பேருக்கும், அமெரிக்க போலிசாருக்கும் இடையே நடைபெறும் கிரைம் திரில்லர் கதை தான் இப்படமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் இப்படத்தை வெளியிடவுள்ளார்களாம். மேலும் அமேசான் பிரைம் நிறுவனம் இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம்.