அம்மாக்கு உதவியாக இந்த குட்டி தேவதை செஞ்ச வேலையைப் பாருங்க… மறக்காம சுத்தி போட்டுருங்க.. வைரலாகும் வீடியோ..!

ஒரு குட்டிக் குழந்தை செய்யும் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் அப்படித்தான் ஒரு தாய் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவரது குட்டிக் குழந்தை, இரண்டு வயது கூட நிரம்பாத அந்தக் குழந்தை ஓடிவந்து பாத்திரத்தை எடுத்து கழுவத் துவங்குகிறது. பாத்திரத்தைக் கழுவும் சோப்பை எடுத்து ப்ராபராக தேய்த்து கழுவப் போடுகிறது குழந்தை. அம்மா, தான் பாத்திரம் கழுவுவதை வீடியோவாக எடுப்பதைப் பார்த்துவிட்டு ஏன்மா எடுக்குற? என்றும் கொஞ்சுகிறது. அப்பாவுக்கு அனுப்புறதுக்குடா என சமாளித்துக்கொண்டே தாய் எடுத்த அந்த க்யூட் வீடியோவை நீங்களே பாருங்களேன்.