இணையத்தில் வெளியாகிய பிக்பாஸ் முதல் நாள் புகைப்படம்.. வீட்டிற்குள் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினி! குழப்பத்தில் மக்கள்

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில் சமீபத்தில் இரண்டு ப்ரொமோ வெளியாகிய நிலையில் குறித்த நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய மூன்று சீசன்களும் ரசிகரகளிடையே பெரிய அளவில் பிரபலமானது.

பிக்பாஸ் 4-வது சீசனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சீசனிலும் கமல் தொகுத்து வழங்குகின்றார். ஆனால் இதன் போட்டியாளர் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீன்களும் மிக விறுவிறுப்பாக ஓடி ரசிகர்களிடையே நல்ல வெற்றியை பெற்றது.

 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீடு, நடிகை ரம்யாகிருஷ்ணன், தொகுப்பாளினி டிடி என புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது உண்மையில் சீசன் 4ல் உள்ள புகைப்படம் தானா? அல்லது நெட்டிசன்கள் செய்த வேலையா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.