இந்திய அளவில் IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண் பூர்ண சுந்தரி..! தான் சந்தித்த சவால்களை விவரிக்கிறார்..!

ஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் IAS தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி அவர்கள். IAS, தேர்வில் மதுரை மாநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை முருகேசன், இவர் ஒரு விற்பனை பிரதிநிதி. இவரது  தாயார் ஆவுடைதேவி, இவர் இல்லத்தரசி.

இந்நிலையில் இதுகுறித்து, மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி அவர்கள், அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் சிகிச்சை செய்தும் எனக்கு பார்வை கிடைக்கவில்லை. மேலும் நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து BA ஆங்கிலம் படித்தேன்.

மேலும் மூன்று ஆண்டுகளாக பாண்டியன் கிராம வங்கியின் பணியாற்றுகிறேன், கல்லூரி படிப்பு முடிந்ததும் அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்றேன், அப்போது என் தோழிகள் எனக்கு படித்துக் காட்டுவார்கள். என் பிறந்தநாளான இன்று மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது, ஏழை எளிய மக்களுக்காக உழைப்பேன் என தெரிவித்துள்ளார் பூர்ண சுந்தரி அவர்கள்.