தமிழ் சினிமாவில் பல வருடங்களாக மிகவும் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம். நடிப்பைத் தவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களுக்கு டப்பிங் பேசியும் வருகின்றார் இவர். பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சீயான் விக்ரம்.
![]()
மேலம் இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன், ” கோப்ரா ” என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. பல விதமான ப்ரோமோஷன்-கல் இந்த படத்துக்காக செய்யப்பட்டன, ஆனாலும், மோசமான விமர்சனங்களையே பெற்றது இந்த “கோப்ரா” திரைப்படம். மேலும், நடிகர் விக்ரம் “பொன்னியின் செல்வன்” என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்

இந்நிலையில் நடிகர் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றியவரின் மனைவியான “மேரி” என்பவர், இவருடைய வீட்டில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும், திருப்போரூர் கந்தசாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. . அதுமட்டுமில்லாமல், நடிகர் விக்ரம் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…
.@chiyaan today attended the wedding of Deepak with Varshini and blessed the young couple. Deepak is the son of Mary, a member of the housekeeping section of #ChiyaanVikram‘s home for over 40 years. pic.twitter.com/joppn9nayc
— Yuvraaj (@proyuvraaj) September 12, 2022