பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசன் தற்போது 50 நாட்களை கந்து சென்று கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது, என்று தான் கூற வேண்டும்.

இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் அமீர் மற்றும் சஞ்சீவ் என இரு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவே சென்றது என்றே கூறலாம், இந்நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அபிநய் இன்று பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
