திருட்டு மிகத் தவறான ஒரு விசயம். அதனால் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்லக் கூடாது, திருடக்கூடாது எனச் சொல்லி, சொல்லி வளர்க்கின்றனர். திருடர்கள் தாமாகவே மனம் வந்து திருடும்வரை இங்கு திருட்டுச் சம்பவங்களையும் ஒழிக்க முடியாது என்பது தான் நிஜம்.

என்னதான் திருடர்களை போலீஸார் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்தாலும் தண்டனைகாலம் முடிந்ததும், வெளியில் வந்து திருடுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடைகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிப்பது,
இரவில் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்துக் கொள்ளையடிப்பது போன்ற பெரிய கொள்ளைகளைப் பார்க்கும் போது அதிர்ச்சியூட்டும். ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் கையில் கிடைத்ததை வாரிச் சுருட்டிச் செல்லும் பலே திருடர்களும் இருக்கிறார்கள். அதிலும் இந்த டெக்னாலஜி வளர்ந்த யுகத்தில் கடத்தல் திருட்டு மிகச் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

இங்கேயும் அப்படித்தான் ஒருவர் அடிக்கடி தன் லோடு ஆட்டோவில் மது பாட்டில்களை பார்டர் தாண்டி கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்தது. போலீஸாரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் லோடு ஆட்டோவின் பின்பகுதி காலியாகக் கிடந்தது. எதுவும் கடத்தல் பொருள் இல்லை.
போலீஸார் இதை கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தபோதுதான் லோடு ஆட்டோவில் ரகசியமாக ஒரு அறையே வைத்து மதுபாட்டில்களைக் கடத்தியிருப்பது தெரியவந்தது. இதோ இந்தக் காட்சிகளை நீங்களே பாருங்கள்…